/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயன்பாடில்லாத டிஜிட்டல் போர்டு முன்பதிவு பயணிகள் அலைக்கழிப்பு
/
பயன்பாடில்லாத டிஜிட்டல் போர்டு முன்பதிவு பயணிகள் அலைக்கழிப்பு
பயன்பாடில்லாத டிஜிட்டல் போர்டு முன்பதிவு பயணிகள் அலைக்கழிப்பு
பயன்பாடில்லாத டிஜிட்டல் போர்டு முன்பதிவு பயணிகள் அலைக்கழிப்பு
ADDED : மே 18, 2024 05:45 AM
காரைக்குடி, : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரத்தில் ரயில்பெட்டி நிற்கும் இடத்தை அறிந்து கொள்ள டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படாததால் முன்பதிவு செய்த பயணிகள் பெட்டி நிற்கும் இடம் தெரியாமல் சிரமப்பட்டனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்னை,ராமேஸ்வரம், விருதுநகர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடைகளில் வண்டி எண் குறித்த டிஜிட்டல் போர்டு அமைக்கவும், பயணிகள் பயன்பாட்டிற்கு லிப்ட் அமைத்திட கோரிக்கை எழுந்தது. இங்கு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.13.91 கோடி செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள நடைமேடையில் வண்டி எண் மற்றும் ரயில் பெட்டிகள்குறித்து அறிந்திட போர்டு இருந்தும் அவை முழுமையாக பயன்பாட்டில் இல்லை. முன்பதிவு செய்து ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் அங்கும் இங்கும் அலையும் சூழல் நிலவுகிறது.