/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சிகளில் பயனில்லாத மண்புழு உரக்கூடங்கள்
/
ஊராட்சிகளில் பயனில்லாத மண்புழு உரக்கூடங்கள்
ADDED : மார் 08, 2025 04:21 AM

காரைக்குடி : கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து மக்கும் குப்பையில் இருந்து மண்புழு இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை மண்புழு வளர்க்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து காணப்படுகிறது. அரசின் நிதி வீணாவதோடு மண்புழு உரக்கூடம் அமைத்ததற்கான நோக்கமும் வீணாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மண்புழு உரக்கூடங்களை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.