/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாசுபடுகிறது திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பால் வைகை ஆறு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாழாகிறது
/
மாசுபடுகிறது திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பால் வைகை ஆறு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாழாகிறது
மாசுபடுகிறது திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பால் வைகை ஆறு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாழாகிறது
மாசுபடுகிறது திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பால் வைகை ஆறு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாழாகிறது
ADDED : ஏப் 08, 2024 05:44 AM

திருப்புவனம் ; வைகை ஆறு நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கொட்டி வரும் குப்பைகளால் பாழாகி வருகிறது.
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. திருப்புவனம் தாலுகா விவசாயிகள் முழுக்க முழுக்க வைகை ஆற்று பாசனத்தை நம்பியே உள்ளனர்.வைகை ஆற்றை ஒட்டி ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இவற்றை நம்பி தட்டி, கிடுகு, துடைப்பம் உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. நெல், வாழை, கரும்பு என விவசாய பணிகள் அனைத்தும் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே நடைபெறுகிறது.
விரகனுார் மதகு அணையில் இருந்து பிரியும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை ஆற்றின் அகலம் 250 மீட்டரில் இருந்து 300 மீட்டர் வரை இருக்கும். சமீப காலமாக பொதுப்பணித்துறை ஆற்றினுள் பாதை அமைத்ததால் அகலம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் திருப்புவனம் பேரூராட்சி உள்பட வைகை ஆற்றை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பலவும் தங்கள் பங்குக்கு குப்பைகளை கொட்டி வைகை ஆற்றை மாசுபடுத்துவதுடன் ஆற்றின் அகலத்தையும் குறைத்து வருகிறது.
வைகை ஆற்றினுள் கருவேல மரங்களும் நாணல் புதர்களும் அளவிற்கு அதிகமாக வளர்ந்து நீரோட்டத்தை தடுத்து வருகின்றன. ஆற்றை ஒட்டி உள்ள குடியிருப்புவாசிகளும் வைகை ஆற்றை ஆக்கிரமித்து மரங்கள், செடிகள் வளர்த்து வருகின்றனர். இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ள போது நீரோட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும் வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களிலும் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகள், ஆறு, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆக்கிரமிப்பு குறித்து விவசாயிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பை அகற்றியும் குப்பைகளை கொட்டி மாசுபடுத்தாமல் தடுக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

