/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேன்-கார் மோதல்: 7 மாணவிகள் காயம்
/
வேன்-கார் மோதல்: 7 மாணவிகள் காயம்
ADDED : ஆக 23, 2024 04:16 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கார் மீது தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வாகனம் மோதியதில் 7 மாணவிகள் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பில்லுப்பட்டி உயர்நிலைப்பள்ளிக்கு எஸ். புதுார் ஒன்றிய பகுதியிலிருந்து (தனியார் பள்ளி) நேற்று காலை 7:00 மணிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றது.
முசுண்டபட்டி அருகே திருமலைக்குடி வளைவில் எதிரே வந்த காருடன், பள்ளி மாணவிகள் சென்ற வாகனம் மோதியதில் அதில் பயணித்த 7 மாணவிகள் காயமடைந்தனர்.
டிரைவர் செல்வராஜ் 54 காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் துவரங்குறிச்சி அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

