/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
/
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
ADDED : ஆக 27, 2024 11:52 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே இடம் தொடர்பான புல வரைபடம் அடங்கல் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,காந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார். இவர் 2008ல் தன் இடத்தில் கோழிப்பண்ணை அமைக்க திட்டமிட்டார். இதற்காக வங்கி மூலம் கடன் பெற முயன்றார். இதற்கு அவருக்கு நிலம் தொடர்பான புல வரைபடம், பட்டா உள்ளிட்டவை தேவைப்பட்டது. 2008ல் வேலங்குடி வி.ஏ.ஓ.,வாக இருந்த காந்தியை சந்தித்து அடங்கல், புல வரைபடம், சொத்து விவரம் வழங்க கேட்டார்.
அதற்கு வி.ஏ.ஓ., ரூ.500 லஞ்சம் கேட்டார். பணம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அளித்த அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை வி.ஏ.ஓ., காந்தியிடம் செந்தில்குமார் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் வி.ஏ.ஓ.,வை பணத்துடன் கைது செய்தனர்.
இவ்வழக்கு சிவகங்கை லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. காந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்முரளி தீர்ப்பளித்தார்.

