/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
/
வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED : ஜூலை 11, 2024 05:17 AM

சிவகங்கை: ஆனி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிவகங்கை அருகே சாமியார்பட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
சாமியார்பட்டி வாராகி அம்மன் கோயிலில் உள்ள வாராகி அம்மனுக்கு ஆனி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பஞ்சகவியம், திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் உட்பட திரவிய அபிேஷகங்கள் நடந்தது.
அம்மனுக்கு பழங்கள், இனிப்பு, கிழங்கு வகைகளை வைத்து நைவேத்தியம் செய்தனர். குங்கும அர்ச்சனை செய்து, நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சன்னதியில் தேங்காய் விளக்கு ஏற்றி நேர்த்தி செலுத்தினர்.