/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுரோட்டில் விளம்பர போர்டு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
நடுரோட்டில் விளம்பர போர்டு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
நடுரோட்டில் விளம்பர போர்டு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
நடுரோட்டில் விளம்பர போர்டு விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : செப் 03, 2024 06:22 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.
இப்பேரூட்சியில் நான்கு ரோடு சந்திப்பில் இருந்து திண்டுக்கல் ரோட்டில் அரணத்தங்குண்டு வரை இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு ஒரு அடி உயர தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த சுவற்றின் மேலேயும் அருகிலும் சில கடைக்காரர்கள் விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர்.
எதிரே வாகனங்கள் வரும்போது டூவீலரில் வருபவர்களுக்கு சிரமத்தை தருகிறது. குறிப்பாக சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும்போது இந்த விளம்பரம் போர்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சாலை நெடுகிலும் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்றி விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.