/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : மார் 11, 2025 05:00 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர்நாகேந்திரன், தென்மண்டல தேர்தல் ஆணையர் தினேஷ், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலர் முனியாண்டி, மாவட்ட துணைச்செயலர் செழியன், இணைச் செயலர் ராமச்சந்திரன், அமைப்புச்செயலர் காந்தி, பிரசார செயலர் இளையராஜா துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க அறக்கட்டளையை வலுப்படுத்துவது. கிராம நிர்வாக அலுவலர்களை சிறப்பு நிலை, தேர்வு நிலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். குடியிருப்பு பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
பதவி உயர்வு, ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். புதிதாக பணியில் சேரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி, நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொதுச்செயலர்குமார், மாநில பொருளாளர் தியாகராஜன், மாநில துணைத் தலைவர் ஜான்போஸ்கோ, மாநிலச் செயலர்கள் புஷ்பகாந்தன், உதயசூரியன் பேசினர். மாவட்ட பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.