/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பசலை கால்வாய் அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியை நிறுத்திய கிராம மக்கள்
/
கீழப்பசலை கால்வாய் அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியை நிறுத்திய கிராம மக்கள்
கீழப்பசலை கால்வாய் அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியை நிறுத்திய கிராம மக்கள்
கீழப்பசலை கால்வாய் அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியை நிறுத்திய கிராம மக்கள்
ADDED : ஜூன் 27, 2024 04:20 AM
மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராம பூர்வீக வைகை பாசன கண்மாய்க்கு மானாமதுரை நகர் எல்லையை ஒட்டி வைகை ஆற்றுப்பகுதியிலிருந்து பாசன கால்வாய் செல்கிறது.அண்ணாதுரை சிலை அருகே செல்லும் கால்வாய்க்கு அருகில் கால்வாயை ஒட்டி தனியாருக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறி அங்கு தடுப்பு சுவர் கட்டும்பணி நடைபெற்றது.
கீழ்ப்பசலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அதனை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு சர்வே செய்த பிறகு தனியாருக்கு சொந்தமான இடம் இருந்தால் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெறலாம் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் சர்வே செய்யும் பணியை துவங்கினர்.
கீழப்பசலை கிராம மக்கள் மானாமதுரை நகர் எல்லை பகுதியில் கால்வாய் துவங்கும் இடத்திலிருந்து ஆதனுார் வரை முழுமையாக சர்வே செய்யும் பணி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பணியை தடுத்து நிறுத்தினர்.இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே கீழப்பசலை கால்வாயை ஒட்டி தடுப்பு சுவர் கட்டும் இடத்தில் சர்வே செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் வந்த போது கிராம மக்கள் அதனை தடுத்து விட்டனர்.
இதையடுத்து வருவாய்த் துறையினரிடம் பொதுப்பணித்துறை சார்பில் கீழப்பசலை கால்வாயை முழுமையாக சர்வே செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுஉள்ளது. விரைவில் கீழப்பசலை கால்வாய் முகப்பிலிருந்து ஆதனுார் வரை முழுமையாக சர்வே செய்யப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து விடப்படும் கழிவு நீரை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.