/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் வன்கொடுமை'
/
'நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் வன்கொடுமை'
ADDED : பிப் 26, 2025 02:12 AM
காரைக்குடி:காரைக்குடியில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியதாவது: காரைக்குடி தான்தோன்றி விநாயகர், பாண்டி முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள 22 சென்ட் இடம், தனிநபரால் வேலி போடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் வேலியை, சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுவரை அந்த வேலி அகற்றப்படவில்லை.
சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். அழிவு சக்தி எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்றே நீதி போதனை வகுப்பு அகற்றப்பட்டு விட்டது.
பள்ளியில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறையாவது ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தி.மு.க., ஆட்சியில் இருந்தால் இதுபோன்று தான் நடக்கும்.
ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் செயல் சட்ட விரோதமானது. 500 ரூபாய் நோட்டுக்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிப்பார்களா. தி.மு.க., அரசு சட்டவிரோத செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

