/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'வைட்டமின் ‛ஏ' திரவம் வழங்கும் முகாம்
/
'வைட்டமின் ‛ஏ' திரவம் வழங்கும் முகாம்
ADDED : ஜூன் 29, 2024 05:03 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் 5 வரை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு வைட்டமின் ஏ சத்து திரவம் வழங்கும் முகாம் நடத்தப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அங்கன்வாடி மையம், துணை சுகாதார, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைட்டமின் ஏ திரவம் இலவசமாக வழங்கப்படும். பிறந்து 6 மாதத்தில் இருந்து 5 வயதிற்கு உட்பட்ட 93,335 குழந்தைகளுக்கு இத்திரவம் இலவசமாக வழங்கப்படும்.
முகாமில் மாவட்ட அளவில் உள்ள 1552 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர், சுகாதார செவிலியர் மூலம் வீடு தோறும் சென்று வழங்கப்படும். பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு இலவசமாக வைட்டமின் ஏ திரவம் வழங்க வேண்டும்.

