/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் மாடுகளை பெற தன்னார்வ அமைப்பு மறுப்பு
/
கோயில் மாடுகளை பெற தன்னார்வ அமைப்பு மறுப்பு
ADDED : மே 04, 2024 05:23 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் சுற்றித்திரியும் கோயில் மாடுகளை பிடிக்க மதுரை கோயில் நிர்வாகம், தன்னார்வ அமைப்பினர் மறுத்து விட்டதால் சிக்கல் உருவாகி உள்ளது.
திருப்புவனத்தில் நாளுக்கு நாள் கோயில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்துவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
திருப்புவனத்தில் தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை ஆகியவற்றில் வீணாகும் கழிவுகளை உண்டு கோயில் மாடுகள் வளர்ந்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒருசில மாடுகள் இருந்த நிலையில் தற்போது 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் வலம் வருகின்றன.
கோயில் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் மதுரையிலுள்ள கோயில் ஒன்றின் நிர்வாகம், தன்னார்வ அமைப்பினர்களை தொடர்பு கொண்டது.
ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி மறுத்து விட்டனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் கலெக்டரிடம் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இனி வேறு வழியில் கோயில் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சியினர் தெரிவித்தனர்.