/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு
/
பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு
ADDED : ஏப் 20, 2024 05:24 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் உள்ள மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் முறையாக பூத் சிலிப் வழங்காததால் ஓட்டு சாவடி தெரியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 37 பூத்கள் உள்ளன. நகராட்சியில் 17,951 ஆண் வாக்காளர்கள்.18,887 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வரிசை எண், பாகம் எண், எந்த பூத் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பூத் சிலிப் வழங்கப்பட்டது.
இவற்றை நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுதோறும் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில நகராட்சி பணியாளர்கள் முறையாக வழங்கவில்லை. பணியாளர்கள் வழங்காத பூத் சிலிப்பை சம்பந்தப்பட்ட பூத்தில் நேற்று வெளியே வைத்துக்கொண்டு அங்கு சிலிப் இல்லாமல் வருபவர்களிடம் கேட்டு விசாரித்து வழங்கினர். இதனால் ஒரு சிலர் ஓட்டளிக்கவே வரவில்லை.
சிவகங்கை நகராட்சியில் வார்டு வரையறைக்கு பிறகு ஒரே குடும்பத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஒரு பூத்திலும் தாய்க்கு மற்றொரு பூத்திலும் ஓட்டு மாறியுள்ளது.
இவ்வாறு மாறி இருப்பவர்கள் பூத் சிலிப் இல்லாததால் தங்களது ஓட்டு எந்த பூத்தில் உள்ளது என்பது தெரியாமல் ஓட்டளிப்பதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர்.

