/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர், வீட்டு வரி கட்டாவிட்டால் ஜப்தி
/
குடிநீர், வீட்டு வரி கட்டாவிட்டால் ஜப்தி
ADDED : மார் 05, 2025 06:18 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் சொந்த கட்டடங்களில் வசித்து வருபவர்கள், வணிகம் செய்து வருபவர்கள் முறையாக சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.
சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 18 ஆயிரத்து 131 சொத்துகளுக்கு 2 கோடியே 3 லட்சத்து 71 ஆயிரம் பாக்கியுள்ளது. காலி இடங்களுக்கு 14 லட்சமும், தொழில் வரி 53 லட்சமும், குடிநீர் வரி ஒரு கோடியே 8 லட்சத்து 53 ஆயிரமும், கடை வாடகை 20 லட்சமும், பாதாள சாக்கடை ஒரு கோடியே 63 லட்சத்து 45 ஆயிரம் வசூல் செய்ய வேண்டியுள்ளது.
நகராட்சியில் இதுவரை சொத்து வரி 3 கோடியே 50 லட்சத்து 30 ஆயிரமும், காலி இடத்திற்கு 15 லட்சத்து 73 ஆயிரமும், தொழில் வரி 5 லட்சத்து 37 ஆயிரமும், குடிதண்ணீர் வரி 59 லட்சத்து 46 ஆயிரமும், கடைவாடகை 32 லட்சமும், பாதாளசாக்கடைக்கு 12 லட்சத்து 45 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், நகராட்சியில் நீண்ட காலமாக பலமுறை அறிவுறுத்தியும் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி கட்டாத சொத்தின் உரிமையாளர்கள் விரைவில் தங்களின் சொத்துக்கான வரிகளை கட்டவேண்டும். மார்ச் 30க்குள் வரி கட்ட தவறும் நபர்களின் சொத்து ஜப்தி செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.