/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் தெப்ப விழா குளத்தில் நீர் நிரப்பும் பணி
/
காரைக்குடியில் தெப்ப விழா குளத்தில் நீர் நிரப்பும் பணி
காரைக்குடியில் தெப்ப விழா குளத்தில் நீர் நிரப்பும் பணி
காரைக்குடியில் தெப்ப விழா குளத்தில் நீர் நிரப்பும் பணி
ADDED : மே 10, 2024 04:59 AM

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
இக் கோயிலில் செவ்வாய் திருவிழா 7 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தினமும் காலை 9:00 மணிக்கு வெள்ளிக்கேடயத்தில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் இரவு தீபாராதனையும் நடக்கிறது. பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே 14ம் தேதி நடைபெறுகிறது.
மே 16ம் தேதி மாலை தெப்பத்திருவிழாவும் மறுநாள் அதிகாலை புஷ்ப பல்லக்கும் நடைபெறுகிறது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.