/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் கண்காணிப்பில் நீர் நிலைகள்
/
தொடர் கண்காணிப்பில் நீர் நிலைகள்
ADDED : ஆக 25, 2024 04:39 AM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் அம்மப்பட்டியில் பலத்த மழையால் நீர் புகுந்ததில் இரு வீடுகள் சேதமடைந்தன. மேலும் மழை தொடர்ந்தால் கண்மாய் பெருகும் என்பதால் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் பலத்த மழை பெய்தது. மழை நீர் வடிகால் மற்றும் நீர் நிலைக்கு மழை நீர் செல்லும் வரத்துக்கால்வாய்கள் துார்ந்து போன இடங்களில் மழை நீர் தேங்க துவங்கி அப்பகுதி குடியிருப்பை பாதிக்க செய்தது.
இரணியூர் அம்மாபட்டியில் சாத்தினாக் கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாய் துார்ந்ததால் தண்ணீர் அருகிலுள்ள வீடுகளில் நுழைந்தது. அதில் இருவீடுகள் சேதமடைந்தது.
தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில் பலத்த மழையால் அதிகமான மழை நீரால் இரணியூர் அம்மாபட்டியில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது.மண் அள்ளும் இயந்திரம் மூலம் கால்வாயை சீரமைத்து நீரை வெளியேற்றியுள்ளோம். தாலுகாவில் கண்மாய்களில் 80 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.
இரு நாட்களாக மழை இல்லாததால் பல இடங்களில் தேங்கிய நீர் வடிந்து விட்டது. மேலும் மழை பெய்தால் கண்மாய் பெருகி விடும் என்பதால் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.' என்றார்.

