/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீர் நிலையான அரசு போக்குவரத்து கழக பணிமனை
/
நீர் நிலையான அரசு போக்குவரத்து கழக பணிமனை
ADDED : ஆக 12, 2024 11:52 PM

காரைக்குடி : காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நீர்நிலை போல் காட்சியளிக்கிறது. டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மானகிரி அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் லிட்., காரைக்குடி மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே, அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.
இங்கிருந்து சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் விரைவு பஸ்கள் பகலில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த பணிமனை முழுவதும் செம்மண் தளமாக காட்சியளிப்பதால் சிறுமழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்னை நிலவிவரும் நிலையில் தற்போது பள்ளங்கள் தோன்றி குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.பணிமனை முழுவதும் சிமென்ட் தளம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.