/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சோதனையின் போதே உடைந்த குழாய் வீணான குடிநீர்
/
சோதனையின் போதே உடைந்த குழாய் வீணான குடிநீர்
ADDED : பிப் 28, 2025 06:51 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று சோதனை ரீதியாக குடிநீர் விநியோகித்த போதே பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது.
திருப்புவனம் நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. 18 வார்டுகளிலும் குழாய் பதிப்பதாக கூறி பேவர் பிளாக் சாலை, சிமென்ட் சாலை, தார்ச்சாலைகளை தோண்டி குழாய் பதித்த பின் முறையாக மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.
குழாய் பதிப்பு பணி முடிந்ததாக கூறி நேற்று சோதனை ரீதியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. திருப்புவனம் புதூர்,கோட்டை பகுதி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. பிப்ரவரியிலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அம்ரூத் 2.0 திட்டத்தில் தரமான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதா கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.