ADDED : ஜூலை 22, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டசெயலாளர் குகன்மூர்த்தி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன், கட்டமைப்பு குழு உறுப்பினர் தங்கராஜ், மண்டல செயலாளர் சாயல்ராம் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர்கள் முத்துக்குமார், பார்த்தசாரதி, ரூபன் ராஜன், ராமஜெயம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக்ராஜா, மகளிரணி செயலாளர் யசோதா பங்கேற்றனர்.