/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காசி பாதயாத்திரை குழுவிற்கு தேவகோட்டையில் வரவேற்பு
/
காசி பாதயாத்திரை குழுவிற்கு தேவகோட்டையில் வரவேற்பு
காசி பாதயாத்திரை குழுவிற்கு தேவகோட்டையில் வரவேற்பு
காசி பாதயாத்திரை குழுவிற்கு தேவகோட்டையில் வரவேற்பு
ADDED : மார் 10, 2025 04:53 AM
தேவகோட்டை: தேவகோட்டை ராமேஸ்வரம் காசி பாதயாத்திரை அமைப்பின் சார்பில் ஏழாவது குழு கடந்த வாரம் ராமேஸ்வரம் கோயில் தரிசனம் செய்து ராமேஸ்வரத்தில் இருந்து மண், தீர்த்தம் சேகரித்து எடுத்து சென்று காசியில் வைத்து பூஜை செய்வார்கள்.
ராமேஸ்வரம் காசி யாத்திரை செல்லும் குழு தேவகோட்டை சோமசுந்தரம் தலைமையில் 24 பேர் செல்கின்றனர். இதில் தேவகோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் உட்பட ஒன்பது பேர் செல்கின்றனர். காசி பாதயாத்திரை குழுவினர் கடந்த வாரம் புறப்பட்டு நேற்று முன்தினம் தேவகோட்டை வந்தனர்.
அவர்களை நகர எல்லையில் நகரத்தார், பொதுமக்கள் வரவேற்றனர். ஊர்வலமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அழைத்து வரப்பட்டு யாத்ரீகர்களை டிரஸ்டிகள் வரவேற்றார்.
சுவாமி தரிசனம் செய்தபின் கந்த சஷ்டி மண்டபத்தில் தங்கினர். நிகழ்ச்சியில் ஜமீன்தார் சோமநாராயணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாதயாத்திரைக்கு காவலாக எடுத்துச் செல்லும் செம்பு வேலிற்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து குழுவினரை வழியனுப்பினர். இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டு சென்றனர். குழுவினரை நால்வர் கோவில் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.