/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொந்தகையில் அகழாய்வு நடைபெறுமா; வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு
/
கொந்தகையில் அகழாய்வு நடைபெறுமா; வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு
கொந்தகையில் அகழாய்வு நடைபெறுமா; வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு
கொந்தகையில் அகழாய்வு நடைபெறுமா; வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 27, 2024 11:44 PM
கீழடி : கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு தொடங்கி உள்ள நிலையில் கொந்தகையிலும் பணி தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடந்த நிலையில் மணலூர், அகரத்தில் பணி கை விடப்பட்டது. கீழடி மற்றும் கொந்தகையில் மட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. கொந்தகையில் அகழாய்வின் போது பண்டைய கால மக்களை தாழிக்குள் வைத்து புதைக்கும் வழக்கம் கண்டறியப்பட்டது.
கொந்தகையில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியினுள் செறிவூட்டப்பட்ட நெல் மணிகள், சூதுபவளம், கத்தி, கருப்பு, சிவப்பு பானைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
முதுமக்கள் தாழியினுள் கிடைத்த எலும்புகளை மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவு ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் கொந்தகையில் பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறுமா என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.