/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய அரசில் பங்கேற்ற தி.மு.க., தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்காதது ஏன்: சீமான் கேள்வி

ADDED : மார் 31, 2024 11:39 PM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் நா.த., வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,' மத்தியில் தொடர்ச்சியாக 18 ஆண்டு ஆட்சியில் பங்கேற்ற தி.மு.க., தமிழை ஆட்சி மொழியாக்காதது ஏன்' என்றார்.
மேலும் அவர் பேசியதாவது:
நாட்டிற்காக போரிட்டு உயிரைத் தியாகம் செய்தவர்களின் நினைவிடத்தை பாருங்கள். சென்னை கடற்கரையில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணாத்துரை சமாதிகளையும் பாருங்கள். அடையாளம் தெரியாது நமது வரலாற்றை அழித்து மறைத்து வைத்திருப்பதை பாருங்கள்.
5000 ஆண்டு பழமையான தமிழை அழித்து 400 ஆண்டு தொடாத இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குகிறார்கள். கச்சத்தீவை பறித்தார்கள். கருணாநிதி, இந்திரா ஆட்சியில் கல்வியை மாநில உரிமையிலிருந்து இழந்தோம். இப்போது தன்னாட்சி பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை.
மத்தியில் 18 ஆண்டு தொடர்ச்சியாக மாநில கட்சி, ஆட்சியில் பங்கேற்றது தி.மு.க., மட்டுமே. அப்போது எதையும் சாதிக்காமல், இப்போது தமிழ் ஆட்சி மொழியாக்குவோம் என்கிறார்கள்.
வரித்தரம் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கைதரம் வேறாக இருக்கிறது. பெரும் மாறுதலை ஏற்படுத்த வேண்டும். ஒரு முறை ஓட்டு செலுத்தி இந்திய லோக்சபாவிற்குள் அனுப்பி பாருங்கள். உரிமை முழக்கத்தை பாருங்கள் என்றார்.