/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு: 7 பேர் காயம்
/
அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு: 7 பேர் காயம்
ADDED : மார் 07, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டியில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும்,126 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு மாட்டிற்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டு 9 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி மாடுகளைப் பிடித்தால் மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் இருந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் 10 மாடுகள் பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் 7 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.