/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வி.சி., கட்சி மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்குமா? ஆலோசிப்பதாக பழனிசாமி பேட்டி

ADDED : செப் 18, 2024 06:35 AM
கள்ளக்குறிச்சி, செப்.18--
''வி.சி., கட்சி மாநாட்டுக்கு முறையாக அழைப்பு விடுத்தால், அதில் கலந்து கொள்வது தொடர்பாக கட்சியின் மூத்த தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அதில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., மட்டும்தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர, நல்ல மனமுள்ளவர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணிக்கு வந்தால், இணைத்துக் கொள்வோம் அவர்களுடன் சேர்ந்து, அ.தி.மு.க., நல்ல ஆட்சியை தரும். வி.சி., கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு முறையாக அழைப்பு விடுத்தால், அதில் கலந்து கொள்வது தொடர்பாக கட்சியின் மூத்த தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.