/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் பா.ஜ.,பிரசாரம் வேகம் பிடிக்குமா
/
திருப்புத்துாரில் பா.ஜ.,பிரசாரம் வேகம் பிடிக்குமா
ADDED : ஏப் 04, 2024 11:24 PM
திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதியில் வேட்பாளர் அறிமுகத்துடன் பா.ஜ., வின் பிரசாரப்பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்குப் பின் பா.ஜ., பிரசாரம் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் முறையாக ரத்தாகி விட்டது.
திருப்புத்துாரில் காங்.,தி.மு.க.,கட்சிகளின் சார்பில் அனுமதி பெற்ற பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.நிர்வாகிகள் ஆலோசனை,கிராமங்களில் அமைச்சர் பெரியகருப்பன்,முன்னாள் அமைச்சர் சிதம்பரம்,வேட்பாளர் கார்த்தி பிரசாரம்,நடிகர் பிரசாரம்.... என்று தொடர்கின்றன.
அ.தி.மு.க., தரப்பிலும் வேட்பாளர் சேவியர் தாஸ் அதே வேகத்தில் பிரசார களத்தில் செல்கின்றார். நா.த., வேட்பாளர் எழிலரசி அறிமுகம், ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் நடந்துள்ளன.
ஆனால் பா.ஜ., தரப்பில் திருப்புத்துாரில் வேட்பாளர் தேவநாதன் அறிமுகமாகி 11 நாட்களாகியும் திருப்புத்துார் தொகுதியில் பிரசாரம் துவக்கப்படவில்லை.கட்சியினர் கூறுகையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்குப் பின் பிரசாரத்தில் பா.ஜ., வின் பிரசாரம் வேகம் பிடிக்கும்' என்றனர். இந்நிலையில் அமித்ஷாவின் காரைக்குடி வருகை இரண்டாவது முறையாக ரத்தாகியுள்ளது.

