/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஓட்டுப்பதிவு குறைவிற்கான காரணம் ஆய்வு நடத்துமா மாவட்ட நிர்வாகம்
/
சிவகங்கையில் ஓட்டுப்பதிவு குறைவிற்கான காரணம் ஆய்வு நடத்துமா மாவட்ட நிர்வாகம்
சிவகங்கையில் ஓட்டுப்பதிவு குறைவிற்கான காரணம் ஆய்வு நடத்துமா மாவட்ட நிர்வாகம்
சிவகங்கையில் ஓட்டுப்பதிவு குறைவிற்கான காரணம் ஆய்வு நடத்துமா மாவட்ட நிர்வாகம்
ADDED : ஏப் 23, 2024 11:53 PM
சிவகங்கை- சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தொகுதியின் கீழ் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி) , திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 8,02,283 ஆண், 8,31,511 பெண், இதர பாலினத்தவர் 63 பேர் என 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர்.
2024 லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 19 அன்று 1,873 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது. அன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடந்த ஓட்டுப்பதிவில் 10 லட்சத்து 49 ஆயிரத்து 475 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு பதிவு செய்தனர். இங்கு 64.25 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவானது.
கடும் சரிவில் ஓட்டுப்பதிவு
இத்தொகுதியில் 2014 தேர்தலில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 373 வாக்காளர்களில், 10 லட்சத்து 18 ஆயிரத்து 994 பேர் ஓட்டளித்ததில், 72.75 சதவீத ஓட்டு பதிவானது. 2019 தேர்தலில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 19 வாக்காளர்களில், 10 லட்சத்து 81 ஆயிரத்து 167 பேர் 69.90 சதவீத ஓட்டளித்தனர். 2024 தேர்தலில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 பேர் 64.25 சதவீதத்தினர் மட்டுமே ஓட்டளித்தனர்.
2019ல் 2.85 சதவீதமும், 2024 தேர்தலில் 5.65 சதவீத ஓட்டுப்பதிவு குறைந்தது, கட்சிகள், வேட்பாளர்கள் இந்த ஓட்டுப்பதிவு சரிவு யாருக்கு சாதகமாக அமையுமோ என்ற பீதியில் உள்ளனர். ஓட்டுப்பதிவு சரிவிற்கு கோடை வெயிலை தேர்தல் அதிகாரிகள் காரணமாக கூறி தப்பிக்கின்றனர். ஆனால், அதையும் மீறி ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 10 முதல் 30 பேர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.
சிவகங்கையில் ஆய்வு நடக்குமா
மாநில தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாகு, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவிற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கியதற்கும் அந்தந்த தேர்தல் அலுவலர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஓட்டுப்பதிவு சதவீத சரிவிற்கான காரணத்தை அறிய, உரிய ஆய்வினை நடத்தினால், அதற்கான செலவு தொகையை தேர்தல் கமிஷன் வழங்கும் என தெரிவித்துள்ளார். அதன்படி சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீத குறைவிற்குரிய காரணத்தை அறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலமே எதற்காக பட்டியலில் இருந்து வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரியவரும்.
எனவே சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீத குறைவிற்கான ஆய்வினை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என வேட்பாளர், கட்சியினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

