/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகையில் கலக்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் வருமா
/
வைகையில் கலக்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் வருமா
வைகையில் கலக்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் வருமா
வைகையில் கலக்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் வருமா
ADDED : மார் 04, 2025 06:20 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் வைகை ஆற்றில் கழிவு நீர் தொடர்ந்து கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வரும் நிலையில் திருப்புவனத்தில் பாதாள சக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுப்புது குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வைகை ஆறு, கால்வாய் உள்ளிட்டவைகளில் அப்படியே விடப்படுகிறது. இதனால் வைகை ஆறு மாசுபட்டு வருகிறது. ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது.
வைகை ஆற்றில் 72 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் திட்ட கிணறுகளும் பாதிக்கப்படுகின்றன.
இதனை தவிர்க்க திருப்புவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இதன் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தலாம்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோர்ட் உத்தரவுப்படி வைகை ஆறு பாயும் ஐந்து மாவட்ட கலெக்டர்களும் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதையடுத்து அதிகாரிகள் வைகை ஆற்றில் சாக்கடை நீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.