ADDED : செப் 07, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மதுரையைச் சேர்ந்தவர்பாக்யநாத சுவாமி 72. பீசர்பட்டினம் கிராமத்தில்அகோரி மடம் கட்டி அங்கேயே தங்கியுள்ளார். மடத்தில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் கஸ்தூரி என்பவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இரண்டு பெண்களும் மடத்தில் இருந்த டி.வி., அலைபேசி, சிறு சிறு ஐம்பொன் சிலைகள் ஆகியவற்றை திருடி சென்றனர்.
திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து மகேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு பெண் கஸ்தூரியை தேடி வருகின்றனர்.