/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொட்டிய ரத்தத்துடன் ஓட்டளித்த தொழிலாளி
/
கொட்டிய ரத்தத்துடன் ஓட்டளித்த தொழிலாளி
ADDED : ஏப் 20, 2024 05:35 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஓட்டுச்சாவடிக்குள் வலிப்பு வந்து விழுந்து தலையில் ரத்தம் கொட்டிய நிலையிலும் ஓட்டு போட்டு சென்றார் கூலித் தொழிலாளி ஒருவர்.
செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் சுதர்சன் 23, கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை 5:30 மணிக்கு ஓட்டுச்சாவடி எண் 68 ல் ஓட்டுப் போட வந்தார். அங்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வெளியே படுக்க வைத்திருந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
இருப்பினும் கட்டாயம் ஓட்டு போட்டு விட்டு தான் செல்வேன் என்று கூறி காயம் பட்ட தலையில் துண்டை கட்டிக்கொண்டு, தனது ஓட்டை அளித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். இதை தொடர்ந்து அவருக்காக காத்திருந்த ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.

