/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.19 லட்சம் மோசடி
/
வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.19 லட்சம் மோசடி
ADDED : பிப் 26, 2025 02:18 AM
சிவகங்கை:சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பத்மநாதன் மகன் முரளி 38. இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒருவர் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஜன.6ல் பேசியுள்ளார்.
அதை நம்பி அவர் கூறிய வங்கி கணக்கிற்கு முதலீடு செய்ய தொடங்கினார். துவக்கத்தில் முதலீடு செய்த பணத்திற்கு லாப தொகையை அனுப்பியுள்ளார். அதன்பின் முரளி மீண்டும் அவர் கூறிய இரண்டு வங்கி கணக்கிற்கு 6 பரிவர்த்தனைகளில் ரூ.19 லட்சத்து 41 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால் அதற்கான லாபத்தை அந்த நபர் அனுப்பாமல் மீண்டும் முதலீடு செய்ய வலியுறுத்தியதால் சந்தேகமடைந்த முரளி, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.