/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பனாரஸ் ரயிலில் 10 கிலோ குட்கா மூடை பறிமுதல்
/
பனாரஸ் ரயிலில் 10 கிலோ குட்கா மூடை பறிமுதல்
ADDED : நவ 12, 2025 12:00 AM

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பனாரஸ் டூ ராமேஸ்வரம் ரயில் பெட்டியில் கிடந்த 10 கிலோ குட்கா மூடையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் சவுதாமா, சுந்தர்ராஜ், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் செல்வம், ராஜேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டனர். 3 வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற பனாரஸ் டூ ராமேஸ்வரம் ரயிலை சோதனை செய்தனர்.
ரயிலின் பின்புறம் இருந்த முன்பதிவில்லா பெட்டியில் சோதனை செய்த போது வெள்ளை நிற சாக்கு பையில் 10 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. கேட்பாரற்று கிடந்த குட்காவை பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

