ADDED : நவ 11, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊர் தலைவர் பொறுப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பினர் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.
இதில் இரு தரப்பையும் சேர்ந்த திருப்பதி, சாத்தப்பன், முத்துநாச்சான், ராஜேஸ்வரி ஆகியோர் காயமடைந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பினரும் புழுதிபட்டி போலீசில் புகார் அளித்தனர். ஒரு தரப்பு புகாரின் பேரில் கனகராஜ் 37, இளையராஜா 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

