/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலநெட்டூர் பள்ளி அருகில் முறிந்த மின்கம்பத்தால் மாணவர்கள் அச்சம்
/
மேலநெட்டூர் பள்ளி அருகில் முறிந்த மின்கம்பத்தால் மாணவர்கள் அச்சம்
மேலநெட்டூர் பள்ளி அருகில் முறிந்த மின்கம்பத்தால் மாணவர்கள் அச்சம்
மேலநெட்டூர் பள்ளி அருகில் முறிந்த மின்கம்பத்தால் மாணவர்கள் அச்சம்
ADDED : நவ 11, 2025 11:59 PM

மானாமதுரை: மானாமதுரை அருகே மேலநெட்டூரில் பள்ளி அருகில் முறிந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு பின்புறம் உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே நீட்டியபடி முறிந்த நிலையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்களும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ஏராளமான மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் எப்போது சாயந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இப்பகுதியில் மின் விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.