/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எழுத்தறிவு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
/
எழுத்தறிவு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : ஜூன் 06, 2025 02:37 AM
சிவகங்கை: வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு இல்லாத ஒரு கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். இவர்களில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதில் 100 சதவீத தேர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. திரிபுரா, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளது.