sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

‛'ஜல்ஜீவனில்' 100 சதவீத குடிநீர் ஊராட்சி ஜன.26 கிராம சபையில் தீர்மானம்

/

‛'ஜல்ஜீவனில்' 100 சதவீத குடிநீர் ஊராட்சி ஜன.26 கிராம சபையில் தீர்மானம்

‛'ஜல்ஜீவனில்' 100 சதவீத குடிநீர் ஊராட்சி ஜன.26 கிராம சபையில் தீர்மானம்

‛'ஜல்ஜீவனில்' 100 சதவீத குடிநீர் ஊராட்சி ஜன.26 கிராம சபையில் தீர்மானம்


ADDED : ஜன 13, 2024 01:18 AM

Google News

ADDED : ஜன 13, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:மத்திய அரசின் ஜல்ஜீவன்' திட்டம் மூலம் நுாறு சதவீத குடிநீர் இணைப்பு பெற்ற ஊராட்சி என ஜன., 26 கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அறிவுறுத்தி உள்ளது. ஜன., 26 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இதற்காக கிராம சபை செலவின தொகை ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்ட விபரங்களை அன்றே நம்ம கிராம சபை' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கிராம சபையில் பொது நிதி செலவு விபரங்களை சமர்பிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கொசுக்கள் மூலம் பரவும் 'டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

2024- -- 25ம் ஆண்டை மக்கள் திட்டமிடல் இயக்கமாக அறிவித்து வறுமை குறைப்பு, சுகாதார, குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். துாய்மைப்பணியில் முன்மாதிரி கிராமம் என கிராம சபையில் அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் ஜல்ஜீவன்' திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி, வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி' என கிராம சபையில் அறிவிக்க வேண்டும். குடிநீர் கட்டணமாக மாதம் ரூ.30 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

வீடுகள் தோறும் குடிநீர் குழாய் வழங்கிய பின், குடும்ப தலைவரின் ஆதார் எண்ணை பெற்று ஜல்ஜீவன்' திட்ட இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பி.பொன்னையா ஜன., 26 க்கான கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கலெக்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படஉள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us