/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்
/
முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்
முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்
முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED : நவ 19, 2025 07:01 AM

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான நேற்று 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் பிறந்த தினமான கார்த்திகை முதல் செவ்வாய் அம்மன் அவதரித்த தினமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று ஓம் சஷ்டி சேவா சார்பில் பால்குட விழா நடந்தது. இதில், பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கல்லுக்கட்டி, செக்காலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் கஞ்சி வழங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.