/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விபத்தில் உயிரிழந்தவர் உறுப்புக்கள் தானம்
/
விபத்தில் உயிரிழந்தவர் உறுப்புக்கள் தானம்
ADDED : நவ 19, 2025 07:01 AM

சிவகங்கை: திருப்புவனம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் புதுக்குளத்தை சேர்ந்தவர் முத்து 54. இவர் திருப்புவனம் அருகே விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை மூளைச்சாவு என மருத்துவ குழுவால் அறிவிக்கப்பட்டார்.
அவரது மனைவி மற்றும் உறவினர்கள் முத்துவின் உடல் உறுப்புக்களை தானாமாக வழங்க ஒப்புதல் அளித்தனர்.
நேற்று காலை கல்லீரல், இரண்டு சிறுநீரகம், கருவிழி மற்றும் தோல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து கல்லீரலை திருச்சி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரிக்கும், இடது சிறுநீரகத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகத்தை திருச்சி காவிரி மெடிக்கல் சென்டருக்கும், தோல் மதுரை கிரேஸ் கென்னட் அறக்கட்டளை தோல் வங்கிக்கும், இரு கருவிழியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் அனுப்பி வைத்தனர்.
முத்துவின் உடலுக்கு நேற்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் சீனிவாசன், எம்.எல்.ஏ., செந்தில்நாதன், நிலைய மருத்துவர் முகமதுரபி, உதவி நிலைய மருத்துவர் தென்றல், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

