/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் 108 சிவலிங்க பூஜை
/
கட்டிக்குளத்தில் 108 சிவலிங்க பூஜை
ADDED : அக் 22, 2025 12:47 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் தினமும் அதிகாலை சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை,பூஜை நடைபெற்று வருகின்றன. நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், குங்குமம் நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறிய அளவிலான 108 சிவலிங்கங்கள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பூஜையில் கட்டிக்குளம், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கிராம மக்கள் செய்திருந்தனர்.