/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தம்
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தம்
ADDED : அக் 22, 2025 12:47 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தமாக நடைபெறுகிறது. பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வருவதால் குறுகிய இடத்தில் பஸ்களை நிறுத்த முடியாமல் மதுரை - - தொண்டி ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில் கடந்த ஆட்சியில் காளையார்கோவில், தொண்டி, மானாமதுரை, மேலுார் பஸ்கள் நிற்கும் இடத்தில் ரூ.74 லட்சத்தில் கூரை அமைத்தனர்.
பின் இப்பகுதியில் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கியது. நீண்ட இழுபறிக்கு பின் 18 கடைகள் தரைத்தளம், கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது திருப்புத்துார், மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் 2 ம் கட்டமாக கூரை அமைக்க எம்.பி.,க்கள் நிதியில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது.
பிப்.26ம் தேதி இதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு மதுரை, திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் பகுதியில் கூரை, தோரணவாயில், சி.சி.டி.வி., கேமரா, டிஜிட்டல் பலகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டுமானப் பணியை ஆக., மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கு பணிகள் மிக மந்த நிலையில் நடந்து வருகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணியை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.