/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
118 ஆயுதப்படை போலீசார் ஸ்டேஷன்களுக்கு மாற்றம்
/
118 ஆயுதப்படை போலீசார் ஸ்டேஷன்களுக்கு மாற்றம்
ADDED : ஜன 30, 2025 05:25 AM
சிவகங்கை: சிவகங்கையில் 118 ஆயுதப்படை போலீசாரை சட்டம் ஒழுங்கு பணிக்காக மாவட்டத்திலுள்ள பிற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாறுதல் செய்து எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உட்பட 5 சப் டிவிஷன்களாக போலீஸ் ஸ்டேஷன்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். இதில் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கூடிய சப் டிவிஷன்களாக சிவகங்கை, மானாமதுரை உள்ளது. இந்நிலையில் நேற்று சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் 118 போலீசாரை காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உள்ளிட்ட சப் டிவிஷன்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணி மாறுதல் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
சிவகங்கை சப் டிவிஷனில் காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் நீண்ட நாட்களாக போலீசார் பற்றாக்குறை உள்ளது. காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 266 கிராமங்கள் உள்ளது. இந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 38 போலீசார் தான் பணியில் உள்ளனர். இதிலும் சிலர் அயல் பணியில் வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இதனால் இந்த பகுதியில் இரவு ரோந்து பணிக்கு செல்வது சிரமம் உள்ளது. ஒரு போலீசார் இரவு நேரத்தில் 36 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டியுள்ளது. இதே நிலைமை தான் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு உள்ளிட்ட மானாமதுரை சப் டிவிஷன்களிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளது. சிவகங்கை மானாமதுரை சப் டிவிஷன்களில் தான் தொடர்ந்து அதிக குற்றச்சம்பவங்களும் நடைபெறுகிறது.
இந்த சப் டிவிஷன்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கூடுதல் போலீசாரை பணியமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

