sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

4 சட்டசபை தொகுதியில்  12,14,997 வாக்காளர்கள்

/

4 சட்டசபை தொகுதியில்  12,14,997 வாக்காளர்கள்

4 சட்டசபை தொகுதியில்  12,14,997 வாக்காளர்கள்

4 சட்டசபை தொகுதியில்  12,14,997 வாக்காளர்கள்


ADDED : ஜன 07, 2025 04:52 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி 4 சட்டசபை தொகுதிகளில் 5,95,261 ஆண், 6,19,673 பெண், இதரர் 63 பேர் என 12 லட்சத்து 14 ஆயிரத்து997 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார். இதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தேர்தல் தாசில்தார் ரமேஷ், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, காங்., நகர் தலைவர் விஜயகுமார்,ஆம்ஆத்மி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு, தி.மு.க., மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மதன்குமார், மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி, அ.தி.மு.க., பொதுக்குழு தேவதாஸ், பொறுப்பாளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு மெய்யப்பன் பங்கேற்றனர்.

மாவட்ட அளவில் 4 சட்டசபை தொகுதியின் கீழ் உள்ள 1364 ஓட்டுச்சாவடிகளின் கீழ் 5,88,036 ஆண், 6,10,159 பெண், இதரர் 60 பேர் என 11, 98,255 வாக்காளர்கள் இருந்தனர். தீவிர சுருக்க திருத்தம் நடத்தியதின் மூலம் 9,792 ஆண், 12,803 பெண், இதரர் 4 பேர் என 22,599 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதில், 2567 ஆண், 3289 பெண், இதரர் 1 என 5,857 வாக்காளர்கள்பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர். இதில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி வந்த 102, நீக்க கோரி வந்த 229, திருத்தம் கோரி வந்த 380 மனுக்கள் என 711 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us