ADDED : மார் 05, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர், : திருக்கோஷ்டியூர் போலீசார் பட்டமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையின் போது எம்.புதுார் தண்ணீர் தொட்டி அருகில் வந்த டூ வீலரை சோதனை செய்தனர்.
அதிலிருந்த தடை செய்யப்பட்டா குட்கா பொருட்கள் 13 கிலோவை கைப்பற்றினர். விசாரணையில் திருக்கோஷ்டியூர் செல்லத்துரை மகன் ராஜா 25, பாண்டி மகன் அன்பரசன் 29 என்பது தெரிந்தது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

