/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருந்து வணிகர் வீட்டில் 14 சவரன் நகை கொள்ளை
/
மருந்து வணிகர் வீட்டில் 14 சவரன் நகை கொள்ளை
ADDED : அக் 06, 2025 01:03 AM
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதுாரில் மருந்து வணிகர் பிரேம்குமார், 45, என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 சவரன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் மருந்து மொத்த வணிகரான பிரேம்குமாருக்கு சொந்த ஊரான எஸ்.புதுாரில் வீடு உள்ளது. செப்., 13 அன்று உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் எஸ்.புதுாருக்கு அவர் வந்தார். விழாவில் பங்கேற்று விட்டு செப்., 14 அன்று காலை 8:00 மணிக்கு புதுச்சேரி சென்றுவிட்டார்.
இவரது வீட்டிற்கு முன் வாராப்பூரைச் சேர்ந்த சீனிவாசன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அக்., 3 காலை 9:00 மணிக்கு கடைக்கு வந்த சீனிவாசன் பிரேம்குமார் வீடு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தார்.
எஸ்.புதுாருக்கு நேற்று முன்தினம் வந்த பிரேம்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் இருந்த செயின், தங்கத்தோடு, தங்க ஜிமிக்கி உள்ளிட்ட 14 சவரன் நகைகள், 1.50 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதில் ஈடுபட்டவர்களை உலகம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.