/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2024ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
/
2024ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
2024ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
2024ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
ADDED : ஜன 23, 2025 01:28 AM
சிவகங்கை:தமிழகத்தில் 2024ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் மூலம் 1500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 90 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
உடல் உறுப்புகளை தானம் செய்யும் அனைவரது உடலுக்கும் அரசு மரியாதை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 186ஆகவும், இதர காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 82ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களில் 218 பேர் ஆண்கள். 50 பேர் பெண்கள்.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 1500 உடல் உறுப்புகள் பிறருக்கு வாழ்வளித்துள்ளன.
2008ஆம் ஆண்டு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. கருணாநிதி அந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு அ.தி.மு.க., ஆட்சியின் போது 2015ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டது. 2008ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 7. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து 2023ல் 178 பேரும், 2024ம் ஆண்டில் 268 பேரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மட்டும் 2015க்கு பிறகு இதுவரை 22 பேர் தங்கள் உடல்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்தாண்டு ஜனவரியில் இதுவரை 2 உடல்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததில் இருந்து தானம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.