/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராவல் மண் குவாரியில் ரூ.1.60 லட்சம் வழிப்பறி
/
கிராவல் மண் குவாரியில் ரூ.1.60 லட்சம் வழிப்பறி
ADDED : செப் 25, 2024 05:00 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே கிராவல் மண் குவாரியில் ரூ.1.60 லட்சம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை இந்திராநகர் முனியசாமி மகன் கேசவன் 49. இவர் வேம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவருக்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் அரசு உரிமம் பெற்ற கிராவல் குவாரியில் நடைசீட்டு போட்டு கொடுக்கும் பணி செய்து வருகிறார். இவருடன் இளையான்குடி அருகே இளமனுாரை சேர்ந்த சந்தியாகு மகன் ஆரோக்கிய திரவியம் பணி புரிகிறார்.
செப்.22 மாலை 4:00 மணியளவில் இரண்டு டூவீலரில் வந்த 4 பேர் வாளை காட்டி மிரட்டி கேசவன் வசூல் செய்து வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரத்தையும் ஆரோக்கிய திரவியம் வைத்திருந்த அலைபேசியை பறித்து சென்றனர். இது குறித்து கேசவன் சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிந்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடிவருகின்றார்.