/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு சிவகங்கையில் 160 பேர் பாதிப்பு
/
பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு சிவகங்கையில் 160 பேர் பாதிப்பு
பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு சிவகங்கையில் 160 பேர் பாதிப்பு
பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு சிவகங்கையில் 160 பேர் பாதிப்பு
ADDED : அக் 18, 2024 05:17 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாம்பு கடியால் இந்த வருடத்தில் 160 பேர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே மழைக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் பாம்புகள் கடிப்பதால் அரசு மருத்துவமனைக்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழைக்கு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
நிலங்களில் வசிக்கும் பாம்பு வேறு இடத்தில் தஞ்சம் அடைவதற்காக வெளியேறுகின்றன. விவசாய பணிகளுக்கு செல்வோரை பாம்பு கடிப்பது அதிகரித்துள்ளன. இது தவிர வீடுகளுக்கு வரும் பாம்பு கடிப்பதாலும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். சிலர் கடித்த பாம்புபோடு வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் கடந்த ஜனவரி 33 , பிப்.27, மார்ச் 17, ஏப்.16, மே 32, ஜூன் 16, ஜூலை 20 பேர் என தற்போது வரை 160க்கும் மேற்பட்டோர் பாம்பு கடியால் சிகிச்சை பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2022ம் ஆண்டு 50 பேரும், 2023ல் 32 பேரும், 2024 தற்போது வரை 12 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
டாக்டர்கள் கூறுகையில், பாம்பு கடி உயிழப்பை தடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விஷ எதிர்ப்பு மருந்து இருப்பதை கண்காணித்து வருகிறோம். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விஷ எதிர்ப்பு மருந்து எவ்வாறு, எந்த அளவில் செலுத்த வேண்டும், முதலுதவி எப்படி செய்யவேண்டும் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான பம்புகடி விஷ எதிர்ப்பு மருந்து உள்ளது. பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாக கட்ட கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பராம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையும் செய்யக்கூடாது.
பாம்பு கடித்ததை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கு பாம்பு கடிக்கு ஆளான நபரின் உடலில் ரத்தம் உறைகிறதா என்பதை பரிசோதித்து விட்டு. விஷ எதிர்ப்பு மருந்தை டாக்டர்கள் ஊசி மூலம் செலுத்துவார்கள். உடனடியாக நோயாளியை ஆபத்தில் இருந்து காக்கலாம் என்றனர்.