/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓராண்டில் 18 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு
/
ஓராண்டில் 18 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு
ADDED : ஆக 07, 2025 11:47 PM
சிவகங்கை; சிவகங்கையில் நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட கிராம, நகரங்களில் பெரும்பாலான தெருக்களில் நாய்கள் அதிகளவில் திரிகின்றன. வீடுகளில் வளர்ப்பவர்கள் கூட முறையாக நாய்களுக்கு தடுப்பூசி போட்டு பராமரிப்பது இல்லை.
தெருக்களில் திரியும் நாய்கள் வாகனங்களில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன. நாய்கடிக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே நாய்கடியால் தினமும் 7 முதல் 10 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஒரு வாரத்தில் மட்டுமே 23 பேர் நாய் கடித்து, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஜன. முதல் டிச. வரை 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதிகரித்து வரும் நாய்களால் பொதுமக்கள் ரேபிஸ் நோய் தாக்கும் அச்சத்தில் தவிக்கின்றனர். இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு, மாவட்ட நிர்வாகம், கால்நடை துறையினர் முனைப்புடன் இயங்க வேண்டும்.