/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டக்டர் மீது தாக்குதல் 2 சிறுவர்கள் கைது
/
கண்டக்டர் மீது தாக்குதல் 2 சிறுவர்கள் கைது
ADDED : ஆக 22, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள சிறுகுடி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தவச்செல்வம் 23, தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் 3 பேர் அவரை விரட்டி வெட்டினர்.
இதில் காயமடைந்த தவச்செல்வம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மானாமதுரை போலீசார் பஸ் ஸ்டாண்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தவச்செல்வத்தை வெட்டிய சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், வாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் இருவரை கைது செய்து மேலும் ஒரு சிறுவனை தேடி வருகின்றனர்.