/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரெப்கோ வங்கிக்கு 2 தேசிய விருதுகள்
/
ரெப்கோ வங்கிக்கு 2 தேசிய விருதுகள்
ADDED : அக் 26, 2024 05:12 AM

சிவகங்கை: ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் கூறுகையில், ரெப்கோ வங்கி மற்ற கூட்டுறவு வங்கிகளைப்போல் உருமாறி மொத்த வர்த்தகம் ரூ.20,500 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது.
தென் இந்தியாவில் 108 கிளைகளை கொண்ட இந்த வங்கி, கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து லாபத்தை ஈட்டி 25 சதவீதம் வரை மத்திய மாநில அரசுக ளுக்கு ஈவுத்தொகை வழங்குகிறது. மூத்த குடிமக்களின் சேமிப்பிற்கு 8.25 சதவீத வட்டியும், மற்றவர்க ளுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
மேலும் தினசரி நகைக்கடன், அசையா சொத்துக்களின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. ரெப்கோ சுரபி, ரெப்கோ ஐபிஎல்போன்ற சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளன.கடந்த வருடம் 44,000 தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் ரூ.9.10 கோடி நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
மேலும் லக்னோவில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சி மாநாட்டில், ரெப்கோ வங்கிக்கு கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பானது 2 விருதுகளை வழங்கியுள்ளது.
விருதுகளை ரெப்கோ வங்கி தலைவர் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராசு, மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு ) ஓ.எம்.கோகுல் பெற்றுக் கொண்டனர் என்றார்.