/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்துார் கொள்ளை வழக்கில் எதிர்வீட்டுக்காரர் உட்பட 2பேர் கைது 103 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி மீட்பு

ADDED : நவ 25, 2024 05:00 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கருவியப்பட்டியில் வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தது தொடர்பாக எதிர்வீட்டுக்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 103 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளிப்பொருட்களையும் மீட்டனர்.
கருவியப்பட்டியைச் சேர்ந்தவர் சேதுராமன் 70. இவர் குடும்பத்தினருடன் கோவையில் வசிக்கிறார். அங்கு நகைக்கடை, அடகு கடை நடத்தி வருகிறார். கருவியப்பட்டியில் உள்ள இவரது வீடு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சேதுராமன் மற்றும் பள்ளத்தூர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சேதுராமன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தங்க நகைகள், கொள்ளை போனது தெரிய வந்தது. பள்ளத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் வீட்டை சுற்றி குடியிருப்போரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சேதுராமன் எதிர் வீட்டைச் சேர்ந்த சுரேஷ் 30, நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் தீவிரமாக போலீசார் விசாரித்த போது கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவரையும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய காரைக்குடியைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும் 49, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 103 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்பட்டன.